முடிவுக்கு வந்த டிரம்ப் காலத்து விதி: அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் குவியும் புலம்பெயர்ந்தோர்
வியாழன் (மே 11) நள்ளிரவோடு, அமெரிக்காவின் 'Title 42' விதி காலாவதியானதால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளில் குவிந்தனர்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களை வெளியேற்ற, தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் காலத்து விதியான 'Title 42' மே 11-ஆம் திகதியுடன் காலாவதியானது.
இதையடுத்து, ஊடுருவலைத் தடுக்க அமெரிக்க எல்லைகளில் கடுமையான விதிமுறைகள் நடைமுறை படுத்தப்பட்டது. மேலும் ஊடுருவலைச் சமாளிக்க எல்லையில் கூடுதல் துருப்புக்கள் நிறுத்தப்பட்டன.
AP photo/Fernando Llano
Title 42 விதி காலாவதியாகும் சில மணிநேரங்களுக்கு முன்பே வியாழக்கிழமை மாலை முதல், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அமெரிக்க-மெக்சிகோ எல்லை வழியாக புகலிடம் கோருவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டனர்.
எத்தனை பேர் எல்லையை கடக்க முயற்சகிக்கின்றனர் என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் எல்லை ரோந்து அதிகாரிகள் 60,000-க்கும் அதிகமாந மக்கள் எல்லையை கடக்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
? NEW: @TxDPS and National Guard physically block migrants from crossing the U.S./Mexico border.
— Nick Sortor (@nicksortor) May 10, 2023
I have a bad feeling these heroes are going to end up being persecuted by the Biden administration.
pic.twitter.com/ULRObGS3KE
உள்ளூர் செய்தி அறிக்கைகளின்படி, மெக்ஸிகோவுடனான 1,951-மைல் (3,140-கிலோமீட்டர்) எல்லையில் சுமார் 24,000 அமலாக்க அதிகாரிகள் காவலில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், குறைந்தபட்சம் 1,500 சுறுசுறுப்பான இராணுவத் துருப்புக்கள் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பிற்கு ஆதரவாக நிறுத்தப்படுகின்றன. மேலும் 2,500 தேசிய காவலர் துருப்புக்கள் ஏற்கனவே அங்கு உள்ளனர்.
Title 42 விதி நடைமுறையில் இருந்தபோது, அமெரிக்க அதிகாரிகள் மெக்ஸிகோவிலிருந்து எல்லையைத் தாண்டி குடியேறியவர்களை (புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட) தொற்றுநோயைக் கரணம் காட்டி விரைவாக வெளியேற்ற முடிந்தது.
The Texas Tactical Border Force continues to work constructing barriers to deter illegal migrants along the Rio Grande River. pic.twitter.com/8oWHAiUVhb
— Texas Military Dept. (@TXMilitary) May 11, 2023
இந்த விதி அமுலில் இருந்த காலத்தில், சுமார் 28 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
?? Hundreds of migrants bundled in coats and blankets formed a long line in cold winter air at the #US-#Mexico border.
— FRANCE 24 English (@France24_en) December 23, 2022
They are hoping the #Christmas period will bring an end to uncertainty over their hopes of securing asylum in the #UnitedStates. pic.twitter.com/R1xY2nJreo