தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! முதலிடம் பிடித்த மாவட்டம் எது தெரியுமா?
தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் இன்று (மே.6) காலை 9.30 மணியளவில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இதில், மாணவிகள் 96.44 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதோடு, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
முதலிடம் பிடித்த மாவட்டம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவில் 97.45% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
90.47 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.
பாட வாரியாக 100 % மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை
- தமிழ் - 35
- ஆங்கிலம் - 7
- இயற்பியல் - 633
- வேதியியல் - 471
- உயிரியல் - 652
- கணிதம் - 2,587
- தாவரவியல் - 90
- விலங்கியல் - 382
- கணிணி அறிவியல் - 6,996
- வணிகவியல் - 6,142
- கணக்கு பதிவியல் - 1,647
- பொருளியல் - 3299
- கணிணி பயன்பாடுகள் - 2,251
- வணிக கணிதம் - 210
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |