டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.., அதான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்- அமைச்சர் துரைமுருகன்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கள்ளச்சாராயத்தை நோக்கி மக்கள் செல்வது ஏன் என்பது குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் மக்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்.
கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.
அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft drink போல மாறிவிடுகிறது.
கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது.
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது.
கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா.
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |