தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை- வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் தகவல்..,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |