தமிழக அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ஆக இருக்கும் நிலையில், இதனை 60-ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் என என்பது குறிப்பிடத்தக்கது.