பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா காலமானார்: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜா காலமானார்
தமிழ் திரையிலகின் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பிரபல திரைப்பட இயக்குநரான பாரதிராஜா தன்னுடைய 84 வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, தீவிரமான உடல்நலக் குறைவால் பாரதிராஜா அவதியடைந்து வந்தார்.

இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பாரதிராஜா காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழ் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் இரங்கல்
இந்நிலையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |