விஜயை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? தமிழக ஆளுநர் விளக்கம்
ஆட்சியை அமைக்க தவெக தலைவர் விஜயை அழைக்காதது ஏன் என்று தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல்
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் இதுவரை தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
விஜயை நான் தடுக்க வில்லை ஆனால் அவருக்கு யார் யார் ஆதரவு தருகிறார்கள் என்று விஜய் தெரிவிக்க வேண்டும்.
விஜய் 118 பேரை அழைத்து வரவேண்டும் என்று இல்லை, விஜய் ஆதரவு கடிதங்களை மட்டுமாது தர வேண்டும்.

விஜய் தவிர பெரும்பான்மை உள்ள வேறு கட்சிகளும் ஆட்சியை அமைக்க முன்வரலாம்.
அ.தி.மு.க, தி.மு.க என எந்த கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கலாம், ஆனால் பெரும்பான்மை இல்லாத கட்சிக்கு எப்படி அழைப்பு விட முடியும்.
விஜயை முதலமைச்சராக்கி பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால் குதிரை பேரம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஆளுநர் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |