நித்யானந்தா ஈக்வடாரில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சாமியார் நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தகவல்
நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதுடன், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.
இவர், இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார்.
அதேபோல, கைலாசா நாடு எங்கிருக்கிறது, நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் இன்னும் சரியாக தெரியவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விசாரணையின் போது நித்யானந்தா இந்தியாவிலே இல்லை என்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதனை கேட்ட நீதிமன்றம் இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |