உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு
tamilnadu govt lighting on uchipillaiyar temple against supreme court order: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கம் போல் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலிலே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.
இன்று மதுரை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதோடு, மீறினால் இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரித்தது.
ஆனால், தற்போது வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலிலே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
கல் தூணில் தீபம் ஏற்றப்படாத நிலையில், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.