10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.., முக்கிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வும், பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
அந்தவகையில், மாணவர்கள் தற்போது ஆண்டின் இறுதி தேர்வான பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
அதன்படி, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் திகதி முடிவடைகிறது.
மேலும், பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் திகதி முடிவடைகிறது.
மேலும், பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் திகதி தொடங்கி மார்ச் 27ஆம் திகதி முடிகிறது. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ஆம் திகதி வெளியிடப்படுகிறது.
10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் திகதி முடிவடைகிறது.
மேலும் பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் திகதி முடிகிறது. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ஆம் திகதி வெளியிடப்படுகிறது.
விரைவில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணிகளை கவனிக்க 35 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |