தமிழகத்தில் வெடிபொருள் கடத்தல் வழக்கில் இலங்கைத் தமிழர்களுக்கு சிறை தண்டனை விதிப்பு
இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை பெரியமேடு அருகே வெடிகுண்டு செய்ய தேவையானப் பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து வரவழைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக இலங்கைத் தமிழர்களான சிவகரன் என்ற சிவா, முத்து என்ற சம்பட்டி, வேலுசாமி என்ற பிரபாகரன், கிரிதரன், கருணாகரன் உள்ளிட்ட 13 பேர் மீது க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களில் 7 பேர் தலைமறைவாகினர். ஒருவர் இறந்து வி்ட்டதால் எஞ்சிய 5 பேர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
83 வயதில் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக மாறிய முன்னாள் பாதிரியார்!
க்யூ பிரிவு பொலிஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் சிவகரன், முத்து ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30,000 அபராதமும், வேலுசாமி, கிரிதரன், கருணாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்