புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த படுகொலை முயற்சியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவ அதிகாரி அதிகாரி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் புடினின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோ (Kyrylo Budanov), ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்று கூறினார். ஆனால், அது முற்றிலும் தோல்வியுற்ற ஒரு முயற்சி என்று அவர் கூறினார்.
குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ள காகசஸில் நடந்தது.
உக்ரைனிய ஒன்லைன் நாளிதழான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவிடம் நடந்த சம்பவம் பற்றி கூறிய அவர், "புடினைப் படுகொலை செய்ய ஒரு முயற்சி நடந்தது... அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது என்று காகசஸ் பிரதிநிதிகள் கூறினர். அவர்கள் அதனை கூறி சில நாட்கள் தான் இருக்கும்" என்று கூறினார்.
மேலும் "இது பொதுத் தகவல் அல்ல. (இது ஒரு) முற்றிலும் தோல்வியுற்ற முயற்சி, ஆனால் அது உண்மையில் நடந்தது... இது சுமார் 2 மாதங்களுக்கு முன்பு" என்று அவர் கூறினார்.
ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா மற்றும் தெற்கு ரஷ்யாவின் பகுதிகள் காகசஸ் என்றும் அழைக்கப்படுகின்றன, இது கருப்பு மற்றும் காஸ்பியன் பெருங்கடல்களுக்கு இடையில் உள்ளது.