3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சாதனை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று(மே 4ம் திகதி) எண்ணப்பட்டன.
இந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை கைப்பற்றி கிட்டத்தட்ட 108 இடங்களை கைப்பற்றும் சூழலில் உள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த இந்த சட்டசபை தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்று பேரும் வெவ்வேறு அரசியல் கட்சிகாக களம் கண்டு இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ-வான லாட்டரி மார்டின் குடும்பம்
பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்டின் குடும்பத்தை சேர்ந்த அதிர் மார்டின் மனைவி லீமா ரோஸ், மருமகன் ஆதவ் அர்ஜுனா, மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகிய மூன்று பேர் எம்.எல்.ஏ -வாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும், லீமா ரோஸ் அ.தி.மு.க சார்பிலும் புதுச்சேரியில் சொந்த கட்சி தொடங்கி ஜோஸ் சார்லஸ் மார்டினும் சட்டசபைக்கு எம்.எல்.ஏ-வாக செல்ல உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |