தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |