AI Technology மூலம் ரயில் தண்டவாளங்களில் யானைகளின் உயிர்களை காக்கும் தமிழ்நாடு
ரயில் தண்டவாளங்களில் யானைகள் குடும்பமாக கடக்கும் வீடியோவை தமிழ்நாடு வனத்துறை பகிர்ந்துள்ளது.
யானைகளை காக்கும் தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் உள்ளன. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வந்ததையடுத்து அனைத்து துறைகளிலும் வேலைகள் எளிதாகி விட்டன.
இங்கு AI Technology மூலம் ரயில் தண்டவாளங்களில் பல யானைகளின் உயிர்கள் காக்கப்படுகின்றன.
தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், மதுக்கரையில் யானைகளின் குடும்பம் ஒன்று ரயில் பாதையைக் கடக்கும் வீடியோவை தமிழ்நாடு வனத்துறை பகிர்ந்துள்ளது.
AI மூலமாக இயங்கும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தி 6,592 பாதுகாப்பான பாதைகளை பதிவு செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வனத்துறை தனது பதிவில், "தொழில்நுட்பம் உறுதிப்பாட்டை நிறைவேற்றும்போது என்ன சாத்தியம் என்பதை தமிழ்நாடு நிரூபிக்கிறது.
மதுக்கரையில், AI மூலம் இயங்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு நவம்பர் 2023 முதல் ரயில் தண்டவாளங்களில் யானைகள் இறப்பதை பூஜ்யமாக உறுதி செய்துள்ளது.
12 டவர்கள், 24 கமெராக்கள், 6592 பாதுகாப்பான பாதைகள், 25 வன ஊழியர்கள் கண்காணிப்பில் உள்ளனர். ஒவ்வொரு யானையும் முக்கியமானது" என்று கூறியுள்ளது.
இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியான சுப்ரியா சாஹு, உலக யானைகள் தினத்திற்கு ஒரு மரியாதை என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
TN proves what’s possible when technology meets commitment
— Tamil Nadu Forest Department (@tnforestdept) August 12, 2025
In Madukkarai, AI-powered early warning system has ensured ZERO elephant deaths on rail tracks since Nov 2023
12 towers|24 cameras|6592 safe crossings|25 foreststaff on watch
Every elephant matters
TN shows the world how pic.twitter.com/7L0kaqNtWt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |