இரண்டு ஆண்டுத் திட்டம் தயார்... ட்ரம்பின் திட்டம் தோல்வி: ஈரான் வெளிப்படை
Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலாம் என ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே திங்களன்று கணித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தடைகளை எதிர்கொள்வதற்கு ஈரான் நிர்வாகம் ஒரு ஈராண்டுத் திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்கள் மற்றும் அதிகாரிகளின் உறுதியைச் சோதிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியுற்றார்கள்.
அவர்கள் மற்றுமொரு தோல்வியைச் சந்திக்க விரும்பியது போல் தெரிகிறது என்று மதனிசாதே அரசு தொலைக்காட்சியிடம் கூறினார்.
மேலும், நாங்கள் இந்தத் தடைகள் தொடர்பில் நீண்ட காலமாக காத்திருந்தோம், மட்டுமின்றி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததுடன், ஒரு இரண்டாண்டுத் திட்டத்தையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தடையால் ஏற்பட்ட மிகையான பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக, ஈரானின் பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை சரிவின் விளிம்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்ததிலிருந்து 4.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள ரியால் நாணயம், திங்களன்று கட்டுப்பாடற்ற சந்தையில் ஒரு டொலருக்கு 1.992 மில்லியன் என்ற விகிதத்தில் வர்த்தகமானது.

இதனிடையே, ஈரான் முற்றிலுமாகச் சரிந்து கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், ஈரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையான அமெரிக்காவின் உச்சபட்ச பொருளாதார அழுத்தத்தின் கீழ் இருந்து வந்துள்ளதுடன், இதுவரை அந்த நாடு தப்பிப் பிழைத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பூகம்பம் போன்ற பதிலடியுடன் ஈரான் பதிலளிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கையில் சேர வேண்டாம் என ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |