வாங்கிய கடனுக்காக... இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை

Human Rights Council Rajasthan Crime
By Arbin Oct 28, 2022 06:46 PM GMT
Report

பணத்திற்கு பதிலாக, கடன் வாங்கிய குடும்பத்தினர் தங்கள் இளம் வயது பெண் பிள்ளைகளை ஒப்படைக்கும் நிலை

பெண் பிள்ளைகளை கையளிக்க மறுக்கும் தாய்மார்கள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரம்

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக தங்கள் இளம் வயது சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளதுடன், தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மாகாண நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளது.

வாங்கிய கடனுக்காக... இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை | To Repay Loans Young Girls Being Sold

@AFP

மட்டுமின்றி, 30 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது சக கிராம மக்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

ராஜஸ்தான் மாகாணத்தின் பில்வாரா பகுதியை சுற்றியுள்ள அரை டசின் மாவட்டங்களில், இவ்வாறாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத குடும்பம் தொடர்பில், கடன் அளித்தவர் தங்கள் சாதி பஞ்சாயத்துகளில் புகார் அளிக்கின்றார்.

இதுபோன்ற சூழலில் பணத்திற்கு பதிலாக, கடன் வாங்கிய குடும்பத்தினர் தங்கள் இளம் வயது பெண் பிள்ளைகளை ஒப்படைக்கும் நிலை ஏற்படுகிறது. சில வேளை தொகைக்கு ஏற்ப, ஒன்றிற்கும் அதிகமான பிள்ளைகளையும் ஒப்ப்டைக்கும் நெருக்கடி ஏற்படுவதுண்டு.

வாங்கிய கடனுக்காக... இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்: அதிரவைக்கும் ஆய்வறிக்கை | To Repay Loans Young Girls Being Sold

@getty

இப்படியாக பெண் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் நபர், அவர்களை விற்று தமக்கான தொகையை ஈட்டுகிறார். பெண் பிள்ளைகளை கையளிக்க மறுக்கும் தாய்மார்கள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரமும் நடந்தேறுவதாக மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 1.5 மில்லியன் இந்திய ரூபாய் கடனாக வாங்கிய ஒருவர், தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, கடனை அடைப்பதற்காக தனது சகோதரியையும் 12 வயது மகளையும் விற்க பஞ்சாயத்து வற்புறுத்தியுள்ளது.

மனைவியின் சிகிச்சைக்காக 600,000 ரூபாய் கடனாக வாங்கிய ஒருவர், தமது இளம் வயது மகளை ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளம் பெண் ஆக்ரா பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து மூவருக்கு கைமாறப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, நான்குமுறை குறித்த பெண் கருவுற்றதாகவும் மனித உரிமைகள் ஆனையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் சாதி பஞ்சாயத்துகள் தான் கிராமங்களை கட்டுப்படுத்துவதால், இதுபோன்ற விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் அல்லது மாகாண நிர்வாகத்தால் தலையிட முடியாத சூழல் என பெண்கள் உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US