விலங்காக மாற ஆசையா? 12 லட்சம் மதிப்பிலான நாய் ஆடை வாடகைக்கு!
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் சுமார் ₹12 லட்சம் மதிப்புள்ள நாய் தோற்றம் தரக்கூடிய ஆடை வாடகைக்கு விடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆச்சரியமூட்டும் நாய் மனிதன்
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர், சுமார் ₹12 லட்சம் (14,500 அமெரிக்க டாலர்கள்) செலவு செய்து நிஜமான நாய் போன்ற தோற்றமளிக்கும் ஆடை ஒன்றை உருவாக்கியதற்காக முன்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டோகா நாய் போன்ற அசைவுகளை செய்தல், கைகுலுக்குதல், உருளுதல், ஏன் frisbees கூட பிடிப்பது போன்ற செயல்களை அந்த ஆடையை அணிந்தவாறே செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
"நாய்" ஆக தனது வாழ்க்கையை அவர் தனது பிரபலமான யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். அதில் 70,000க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
அவர் நாயாக மாறிய அனுபவங்களை 62,000க்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில்”, விலங்காக மாறும்" ஆனந்தத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக டோகோ, தற்போது, அந்த ஆடையை வாடகைக்கு விடப் போவதாக அறிவித்துள்ளார்.
வாடகை விலை விவரம்
4 கிலோ எடை கொண்ட இந்த கோலி இன நாய் ஆடை, அசையும் வாய், வால் மற்றும் பாதங்களைக் கொண்டது.
ஜப்பானில் வாடகைக்கு கிடைக்கும் இந்த ஆடையை மூன்று மணி நேரத்திற்கு $320 (சுமார் ₹28,000) என்றும், இரண்டு மணி நேரத்திற்கு $235 (சுமார் ₹20,400) என்றும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |