ஜோ பைடன்- புடின் சந்திப்பு! இன்று நடைபெறபோகும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு
அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு ஜெனிவாவில் இன்று நடக்கிறது.
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், முதன்முறையாக பிரித்தானியா வந்துள்ளார்.
அங்கு நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டதுடன், உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கும் செயல்பாடு, கொரோனா வைரசை பரப்பியது,
அண்டை நாடுகளுடான மோதல் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசவிருக்கிறார்.
இந்நிகழ்வில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மீதான ரஷ்யாவின் சைபர் தாக்குதல், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கொலை செய்ய நடந்த முயற்சி போன்றவை குறித்து இருவரும் விவாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.