இன்று நடைபெறும் இந்திய மக்களவை தலைவர் தேர்தல்.., சபையில் யாருக்கு ஆதரவு அதிகம்?
மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சி தராததால் மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி உருவாகியுள்ளது.
முதல்முறையாக மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 1952 -ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் தேர்வான கணேஷ் வாசுதேவ் மாவ்லேங்கர் என்பவர் இந்தியாவின் முதல் மக்களவை தலைவராக கருதப்படுகிறார்.
மக்களவை தலைவர் தேர்தல்
இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் இன்று வாக்குப்பதிவு முறையில் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிடுகின்றனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதில், 2 முறை மட்டுமே தோல்வி கண்டுள்ளார். அதோடு, 2012 முதல் 2014 வரை மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
ஜுன் 24-ம் தேதி கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் தற்காலிக மக்களவைத் தலைவராக கே.சுரேஷை தேர்ந்தெடுக்காதது தான் எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெறும் தேர்தல் மூலம் இருவருக்கும் மக்களவையில் உள்ள ஆதரவு என்ன என்பதும் தெரிந்து விடும்.
வழக்கமாக ஆளும்கட்சியின் சார்பில் மக்களவைத் தலைவரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை துணைதலைவரும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதனால், துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரியது. இதில், இருவருக்கும் ஒருமித்த கருத்து வராததால் இப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |