சிறையில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய கைதிகள்: அப்பாவி குழந்தை பலி
Toddler dies and dad injured in prison brawl as inmates open fire: சிறை ஒன்றிற்குள் கைதிகள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் அப்பாவிக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
மெக்சிகோவிலுள்ள சிறை ஒன்றிலிருக்கும் தன் உறவினர் ஒருவரைக் காணச் சென்ற ஒருவர், தன்னுடன் தன் இரண்டு வயதுக் குழந்தையையும் அழைத்துச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய கைதிகள்
பார்வையாளர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கும் அந்த நேரத்தில் சரியாக இரு தரப்பு கைதிகளுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் மாறி மாறி சுட்டுக்கொள்ள, உறவினர்களைப் பார்க்க வந்த சிலரும் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
சண்டை குறித்து அறித்து அதிகாரிகள் சிறைக்குள் நுழைந்து அமைதியை நிலை நாட்டிய நிலையில், ஏற்கனவே 10 பேர் உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களில் தன் தந்தையுடன் தங்கள் உறவினரைக் காண வந்திருந்த குழந்தையும் உயிரிழந்துவிட்டது.
அதன் தந்தை உட்பட காயமடைந்த 15க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
எதனால் அந்த சண்டை, உயிரிழந்த குழந்தை யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.