வெளிநாடொன்றில் கருணைக்கொலை செய்யப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை
Toddler euthanised in first case of its kind after Netherlands: நெதர்லாந்து நாட்டில், முதன்முறையாக இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்ட விடயம் பேசுபொருளாகியுள்ளது.
இரண்டு வயதுக் குழந்தை கருணைக்கொலை
குறைப் பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு மூளையில் பயங்கர பாதிப்பு உள்ளதுடன், முகப்பக்கவாதம் மற்றும் கண் பார்வைக் கோளாறுடனும் அவதியுற்று வந்துள்ளது அந்தக் குழந்தை.
அத்துடன், அதற்கு அவ்வப்போது வலிப்பு (epileptic seizures) நோயும் இருந்துள்ளது.

ஆகவே, அந்தக் குழந்தை குறித்து பல்வேறு மருத்துவர்களின் கருத்தைக் கேட்டறிந்த அதன் மருத்துவர், அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தாலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அறிந்துகொண்டதுடன், அது தாங்க முடியாத அளவுக்கு கஷ்டப்படுவதையும் கண்டறிந்துள்ளார்.
ஆகவே, அந்தக் குழந்தையைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள்
நெதர்லாந்தில், 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைக் கருணைக்கொலை செய்யும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபின் கருணைக்கொலை செய்யப்பட்ட முதல் குழந்தை இந்தக் குழந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது.