இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத குழந்தை: தவறான மரண அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி!
பிரேசிலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த குழந்தை பின்னர் மீண்டும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்தெழுந்த குழந்தை
பிரேசிலில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் 8 மாத குழந்தை கியாரா கிறிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ்(Kiara Crislayne de Moura dos Santos) தவறாக இறந்துவிட்டதாக இருமுறை அறிவிக்கப்பட்டதால் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.
கியாரா வைரஸ் தொற்றுக்குள்ளானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் கியாரா இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த குடும்பத்தினர் குழந்தைக்கான இறுதி சடங்கினை மேற்கொண்டுள்ளனர். அப்போது குடும்ப உறுப்பினர்கள் கியாரா-வின் உடலில் உயிர் அறிகுறிகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை மீட்டெடுக்க முயற்சிகள் இருந்தபோதிலும், கியாரா மீண்டும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே துயரத்தில் மூழ்கியிருந்த குடும்பம், உயிரிழந்த செய்தி கேட்டு இரட்டை அதிர்ச்சியை சந்தித்தது.
தவறான மரண அறிவிப்பு
இதையடுத்து கோரியா பிண்டோ நகர மன்றம்(Correia Pinto City Hall) மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளன.
கியாரா இறந்துவிட்டதாக முதலில் மருத்துவமனை அறிவிப்பதிலும், பின்னர் மீண்டும் அவர் உடல்நிலை குறித்த அறிவிப்பதிலும் தவறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த சோக சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை தீர்மானிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தடுக்கவும் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |