புலம்பெயர்ந்தோர் படகிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய கடத்தல்காரர்கள்
Toddler thrown to his death from migrant boat: புலம்பெயர்ந்தோர் படகிலிருந்து குழந்தை ஒன்றைத் தூக்கி வீசியுள்ளார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
ஸ்பெயினுக்கு சொந்தமான தீவொன்றை நோக்கி புலம்பெயர்வோர் படகொன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது.
படகில் நிகழ்ந்த பயங்கரங்கள்
Lanzarote என்னும் தீவை நோக்கி அட்லாண்டிக் சமுத்திரத்தில் அந்த படகு சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணொருவரின் இரண்டு வயதுக் குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கிறது.

குழந்தையின் அழுகையால் எரிச்சலடைந்த ஆட்கடத்தல்காரர்களில் ஒருவர், அந்த இரண்டு வயதுச் சிறுவனைத் தூக்கி கடலில் வீசியுள்ளார்.
தன் குழந்தை தன் கண்களுக்கு முன் கடலில் மூழ்கி உயிரிழப்பதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார் அந்தப் பெண்.
இது குறித்து விளக்கிய மீட்புக் குழு ஒன்றின் தலைவரான Enrique Espinosa என்பவர், அந்தப் படகில் நடந்தது இந்த கொடூரம் மட்டுமல்ல, வேறு பல பயங்கரங்களும் நிகழ்ந்துள்ளன என்கிறார்.
ஆம், படகில் பயணித்த இளம்பெண்ணொருவரை மூன்று பேர் வன்புணர்ந்துள்ளார்கள்
படகு, Lanzaroteஇன் தலைநகரான Arrecife என்னுமிடத்தை வந்தடைந்ததும், மீட்புக் குழுவினரிடம், தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார் அந்த இளம்பெண்.
அதே படகிலிருந்த மற்றொரு நபரும், தான் அந்தப் பெண் சீரழிக்கப்படுவதைக் கண்டதாக சாட்சியமளிக்க, சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சோகம் என்னவென்றால், அந்தக் குழந்தையை கடலில் வீசியது குறித்து பொலிசார் ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை!