ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று எந்த நாடு முதலிடத்தில் உள்ளது தெரியுமா? வெளியான புள்ளி பட்டியல்
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இதுவரை அதிக பதக்கங்களுடன் எந்தெந்த நாடு எந்தெந்த இடத்தில் உள்ளது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதன் படி கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு கடந்த வாரம் துவங்கியது. இந்த ஒலிம்பிக் தொடர் ஜப்பானின் டோக்கியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இந்த ஒலிம்பிக்கில், ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. இந்நிலையில், தற்போது வரை முடிந்துள்ள இந்த ஒலிம்பிக் போட்டியின் அடிப்படையில், சீனா முதல் இடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சீனா 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அடுத்த படியாக ஜப்பான் 17 தங்கப்பதக்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 16 தங்கப்பதக்கம், 17 வெள்ளிப் பதக்கம், 13 வெண்கலப் பதக்கம் என 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதில் பிரித்தானியா 8 தங்கப்பதக்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் 6-வது இடத்திலும், இலங்கை முதல் 70 இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.