திட்டமிட்டபடி ஒத்திவைக்கப்பட்ட திகதியில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? தலைவர் முக்கிய தகவல்
100% திட்டமிட்டபடி ஒத்திவைக்கப்பட்ட திகதியில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என டோக்கியோ 2020 தலைவர் Seiko Hashimoto உறுதியளித்துள்ளார்.
ஜூலை 23ம் திகதி திட்டமிட்ட படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 50 நாட்களே உள்ளன.
ஆனால், ஜப்பான் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுடன் போராடி வருகிறது, நாட்டின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும், 100% ஒலிம்பிக் நடைபெறும் என டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க முடியாது என்று Seiko Hashimoto கூறினார்.
டோக்கியோ நகரமும் கொரோனா அவசரகால நிலைமையின் கீழ் உள்ளது, ஆனால் ஜூன் 23ம் திகதி அன்று அவசரநிலை அமுலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜப்பான் மக்களிடையே ஒலிம்பிக்கிற்கான ஆதரவு 50-80% வரை தொடர்ந்து குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் பயிற்சி அல்லது நிகழ்வுகளை நடத்த சில நகரங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன, கொரோனா குறித்த அச்சங்களுக்கு மத்தியில் வெளிநாட்டு வீரர்கள் மூலம் வைரஸ் பரவி சுகாதாரதுறைக்கு நெருக்கடி ஏற்படுமோ என அஞ்சுகின்றன.