டோக்கியோ ஒலிம்பிக்ஸ்! சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த பிரபல வீரர்... முதல் முறையாக நடந்த ஆச்சரிய நிகழ்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாதவாறு சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கொண்ட வீரரின் செயல் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ ஒலிம்ப்பிக் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷீம் என்ற வீரர் தங்கம் வென்றார், ஆனால் சக இத்தாலி உயரம் தாண்டுதல் வீரர் கியான்மார்கோ டாம்பேரியுடன் அதைப் பகிர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட கால நண்பர்கள், களத்தில் மட்டுமல்ல, களத்த்துக்கு வெளியேயும் நண்பர்கள்.
30 வயது கத்தார் வீரர் பர்ஷீமும் 29 வயது இத்தாலி வீரர் டாம்பேரியும் உயரம் தாண்டுதலில் 2:37 மீட்டர் என்று முடிந்தனர். 2.39 மீட்டர் உயரம் தாண்டும்போது இருவரும் 3 முறை தோல்வியடைந்தனர். எனவே டை பிரேக் அறிவித்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்னொரு ஜம்ப் செய்து வெற்றியாளரை முடிவு செய்யலாம் என்று வாய்ப்பளித்தனர்.
அப்போது கத்தார் வீரர் பர்ஷீம், 2 தங்கப்பதகக்ங்கள் உண்டா? என்று கேட்டார். அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். பர்ஷீம் இந்தச் செய்கை பலருக்கும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பர்ஷீம் கூறுகையில், நான் அவரைப் பார்த்தேன், அவரும் என்னைப் பார்த்தார், இருவருக்குமே தெரிந்தது, ஆட்டம் முடிந்து விட்டது எதற்காக இன்னொரு ஜம்ப்? தேவையில்லை என்று முடிவெடுத்தேன். தடகளத்தில் மட்டுமல்ல வெளியேயும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எப்போதும் விளையாடுவோம்.
இப்போது கனவு நினைவாகியுள்ளது. இதுதான் உண்மையான ஸ்பிரிட், ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட், விளையாட்டு நல்லுணர்வு. இதனை நாங்கள் செய்தியாக ஒலிம்பிக்கில் வெளியிட்டுள்ளோம். தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டோம் என கூறியுள்ளார்.