உக்ரைனுக்கு ஆதரவு... பட்டியல் வெளியிட்டு ஜப்பானைப் பழிவாங்கிய ரஷ்யா
வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் உட்பட, 30க்கும் மேற்பட்டவர்களுக்கு நாட்டில் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளதை ஜப்பான் கடுமையாக விமர்சித்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கை
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஜப்பான் கண்டித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலப் போரைத் தொடர்ந்து ஜப்பானின் பொருளாதாரத் தடைகளை அடுத்தே, விளாடிமிர் புடின் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, ஜப்பான் செப்டம்பர் மாதம் ரஷ்ய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மீது கூடுதல் தடைகளை விதித்தது.
அத்துடன் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி அளவையும் குறைத்துக் கொண்டது. இந்த நிலையிலேயே காலவரையற்ற தடையை எதிர்கொள்பவர்களில் ஜப்பானியர்கள் சேர்க்கப்பட்ட பட்டியலை ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது.
புதிய பட்டியலில் செய்தித் தொடர்பாளர் தோஷிஹிரோ கிடாமுரா, பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கு அழுத்தம்
ரஷ்யாவின் இந்த வருந்தத்தக்க நடவடிக்கைக்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே மக்களிடையேயான பரிமாற்றங்கள் முக்கியமானவை என்று தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா பதிலளித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு தன் மீதான பழியை ரஷ்யா மாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பொருளாதாரத் தடைகளுக்குப் பழிவாங்கும் விதமாக ஜப்பானிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இருப்பினும், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை ரஷ்யா உடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த போதிலும், ஜப்பான் தூர கிழக்கு ரஷ்ய தீவான சகாலினிலிருந்து எரிவாயு இறக்குமதியைத் தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |