2 முறை கொரோனா: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய இங்கிலாந்து வீரர்
ஐந்து மாத இடைவெளியில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டாம் டீன், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 200 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சக நாட்டவரான டங்கன் ஸ்காட்டைப் பின்னுக்குத் தள்ளி 1:44.22 நிமிடத்தில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் 21 வயது டாம் டீன்.
இவருடைய வெற்றியை அனைவரும் வியப்பாகப் பார்க்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 2-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.
அதற்கு முன்பு செப்டம்பர் மாதம் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஜனவரியில் கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டு தன்னுடைய குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது தங்கம் என்னை விட்டு வெகுதூரத்தில் இருப்பது போல தோன்றியது.
தற்போது கனவு நிறைவேறியுள்ளது. கடந்த 12 மாதங்களில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். இது யாரும் கேள்விப்படாதது என்று வெற்றிக்குப் பிறகு தனது மகிழ்ச்சியை டாம் டீன் பகிர்ந்துகொண்டுள்ளார்.