பிரியாணி சுவையை மிஞ்சும் வகையில் தக்காளி சாதம்: எப்படி செய்வது?
பிரியாணி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாகதான் இருக்கும்.
பிரியாணி சுவையிலேயே அட்டகாசமான தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு பார்த்தால் அருமையாக இருக்கும்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் தக்காளி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி- ¼ kg
- தக்காளி- 4
- வெங்காயம்- 3
- பச்சை மிளகாய்- 5
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1½ ஸ்பூன்
- புதினா- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- தயிர்- 3 ஸ்பூன்
- சோம்பு- ½ ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- ஏலக்காய்- 3
- பிரியாணி இலை- 1
- கிராம்பு- 4
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து இதில் தயிர் சேர்த்து கிளறி 1 கப் அரிசிக்கு 1¼ கப் தண்ணீர் அளந்து ஊற்றி பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்து வந்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசி சேர்த்து மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கி நெய் சேர்த்து கிளறி பறிமாரினால் சுவையான தக்காளி சாதம் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |