தக்காளியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தக்காளியை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்
தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
சுவையான தயிரை இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது! அப்பறம் காலை கடனில் தீராத சிக்கல் தான்
தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.
தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.
குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.
மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.
[W3U3E8