பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: அதிர்ச்சித் தகவல்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடைய மகள் ஹொட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மகள்
Men in Black வரிசை திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஆஸ்கர் விருது வென்றவரான நடிகர் டாமி லீ ஜோன்ஸ் (Tommy Lee Jones). டாமியின் மகள், விக்டோரியா ஜோன்ஸ் (34).

புத்தாண்டு தினத்தன்று, அதிகாலை 2.52 மணியளவில் சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றிற்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு விக்டோரியா சுயநினைவிழந்து கிடந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சித் தகவல்
இந்நிலையில், விக்டோரியா போதைப்பொருள் ஒன்றை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்டோரியா தங்கியிருந்த அதே ஹொட்டலில் தங்கியிருந்த ஒருவர், விக்டோரியா நினைவிழந்து கிடப்பதைக் கண்டு அவசர உதவியை அழைத்துள்ளார்.

அப்போது, அளவுக்கதிகமாக போதைப்பொருள் உட்கொண்ட நபருக்காக பயன்படுத்தப்படும் ’code 3’ என்னும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, விக்டோரியா போதைப்பொருள் ஒன்றை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே விக்டோரியா போதைப்பொருள் ஒன்றை வைத்திருந்ததற்காக ஒரு முறையும், பயன்படுத்தியதற்காக ஒரு முறையும் என 2025இல் இரண்டு முறை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |