பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்பு
பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடைய மகள் ஹொட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
பிரபல நடிகர் மகள்
Men in Black வரிசை திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஆஸ்கர் விருது வென்றவரான நடிகர் டாமி லீ ஜோன்ஸ் (Tommy Lee Jones).
டாமியின் மகள், விக்டோரியா ஜோன்ஸ் (34). புத்தாண்டு தினத்தன்று, அதிகாலை 2.52 மணியளவில் சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றிற்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

FilmMagic
அங்கு விக்டோரியா சுயநினைவிழந்து கிடந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
விக்டோரியாவின் அறையில் அவருடன் யாராவது இருந்தார்களா, அவருக்கு என்ன உடல் நல பாதிப்பு என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
விக்டோரியா சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் ஒரு சிறந்த நடிகை என அவரது தந்தையான டாமி லீ ஜோன்ஸ் மகள் குறித்து பெருமையாக பேசுவதுண்டு.
விக்டோரியாவின் திடீர் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ள நிலையில், அது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Getty Images