அநுரகுமார திசாநாயக்க பதவியேற்பு எப்போது? வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க இன்று காலை ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க பதவியேற்பு
2024ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 9வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அநுரகுமார திசாநாயக்க இன்று காலை நாட்டின் 9வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க-வின் பதவியேற்பு விழா இன்று காலை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
பிரதமராகும் ஹரிணி அமரசூரிய
இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
மேலும் நிதியமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளார். அத்துடன் புதிய ஜனாதிபதியின் 15 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்க உள்ளனர்.
கூடுதல் அமைச்சரவை பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |