முதல் கொரோனா தொற்றை பதிவு செய்த நாடு! எப்படி பரவியது?
தீவு நாடான டோங்கா, தங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலிருந்து விமானம் மூலம் வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், டோங்காவில் பதிவான முதல் கொரோனா தொற்று இது என செய்தி இணையதளமான Matangi Tonga அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்த்த சில உலக நாடுகளில் டோங்காவும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வானொலியில் பேசிய டோங்கா பிரதமர் Pohiva Tu'i'onetoa, நியூசிலாந்திலிருந்து டோங்கா வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதன்கிழமை நியூசிலாந்தின் Christchurch நகரிலிருந்து விமானம் மூலம் டோங்கா வந்த பயணி ஒருவருக்கே தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
அந்த விமானத்தில் மொத்தம் 215 பேர் பயணித்துள்ளனர். தொற்று உறுதியான நபர் தற்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டள்ளார் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊரடங்கு ஏதும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து பிரதமர் திங்கட்கிழமை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி இணையதளமான Matangi Tonga தெரிவித்துள்ளது.