சுனாமியில் சிக்கி 27 மணிநேரம் நீந்தி கரைக்கு வந்த மாற்றுத்திறனாளி! ஓர் அதிச நிகழ்வு

Tsunami Tonga Swim Disabled Man Survive Lisala Folau
By Ragavan Jan 20, 2022 04:54 PM GMT
Report

டோங்காவில் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட மாறுத்திறனாளி ஒருவர், 27 மணிநேரம் போராடி நீந்தி கரையை வந்தடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது.

லிசாலா ஃபோலாவ் (Lisala Folau) எனும் 57 வயதான அந்த மாற்றுத்திறனாளி, டோங்கா நாட்டில் வசிக்கும் தச்சர் ஆவார்.

சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அட்டாட்டா தீவில் உள்ள அவரது வீட்டிற்குள் 20 அடி உயர அலை மோதியதில் அவர் தண்ணீரில் தள்ளாடியுள்ளார்.

அப்போது, அந்த நீரில் மிதந்துவந்த ஒரு மரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர், அந்த மரத்தோடு ஒட்டிக்கொண்டு மக்கள் யாருமே வசிக்காத டோகெடோக் தீவுக்கு அடித்துச்ச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை காலை கரை சேர்ந்துள்ளார்.

சுனாமியில் சிக்கி 27 மணிநேரம் நீந்தி கரைக்கு வந்த மாற்றுத்திறனாளி! ஓர் அதிச நிகழ்வு | Tonga Tsunami Disabled Man Swims 27 Hours Survive

பின்னர் அவர் மற்றொரு தீவை அடைய 8 மணி நேரத்திற்கும் மேலாக 4 மைல்கள் நீந்தியுள்ளார். அங்கே கரையை அடைந்ததும், அங்கிருந்து நிலப்பகுதிக்குல் மற்றோரு மைல் தூரம் நடந்து சென்றுள்ளார்.

அவரது கால்களில் உள்ள பிரச்சினையால், அவரால் இயல்பாகவே ஒரு குழந்தை நடப்பது போல மெதுவாகவே நடக்க முடியும்.

இறுதியாக அவர் மக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று அவர்களின் உதவியுடன் காரில் பாதுகாப்பான் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

டோங்கன் வானொலி நிலையமான பிராட்காம் எஃப்எம்மிடம் தனது அசாதாரண அனுபவத்தைப் பற்றி பேசிய லிசாலா, சுனாமி குறித்து முதலில் தனது சகோதரரால் எச்சரிக்கப்பட்டதாகக் கூறினார்.

அலையில் இருந்து தப்புவதற்காக குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வெளியே விரைந்து வந்து மரத்தில் ஏறியதாகவும், அது அவர்களுக்கு அடியில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுனாமியில் சிக்கி 27 மணிநேரம் நீந்தி கரைக்கு வந்த மாற்றுத்திறனாளி! ஓர் அதிச நிகழ்வு | Tonga Tsunami Disabled Man Swims 27 Hours Survive

ஆபத்து கடந்துவிட்டதாக நினைத்து, குடும்பம் கீழே ஏறியது - ஆனால் தீவு இரண்டாவது அலையால் தாக்கப்பட்டது. 20 அடிக்கு மேல் உயரம் உள்ள அந்த அலை அவர்கள் மூவரையும் கடலுக்கு கொண்டு சென்றது

. கரையிலிருந்து மைல் தொலைவில் சிக்கித் தவித்த லிசாலா, இருட்டாக இருந்ததால் தண்ணீரில் தனது மகனையோ அல்லது மருமகளையோ பார்க்க முடியவில்லை, ஆனால் அவர்கள் அவரை அழைப்பதைக் கேட்க முடிந்தது.

சிறிது நேரத்தில் மருமகளின் குரல் நின்றது, ஆனால் மகன் தொடர்ந்து அழைத்துள்ளார். ஆனால் அதற்கு பதில் குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்க முடிவு எடுத்ததாக லிசாலா கூறினார், ஏனெனில் தனது மகனோ அல்லது மருமகளோ தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவரைக் காப்பாற்றுவதை அவர் விரும்பவில்லை.

ஏதேனும் கெட்டது வந்தாலும் அது தன்னோடு போகட்டும் என நினைத்துள்ளார்.

இறுதியில், லிசாலா ஒரு முறிந்த மரத்தைக் கண்டுபிடித்தார், மேலும் அவர் இறந்துவிட்டால், அவரது உடலைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்கு இருக்கும் என்று நினைத்து அதை ஒட்டிக்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால், அவர் எப்படியோ உயிர் பிழைத்து நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவனெறால், அவரது மகன் மற்றும் மருமகள் இருவரையும் இன்னும் காணவில்லை. அவர்களது நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. சுனாமியில் சிக்கி 27 மணிநேரம் நீந்தி கரைக்கு வந்த மாற்றுத்திறனாளி! ஓர் அதிச நிகழ்வு | Tonga Tsunami Disabled Man Swims 27 Hours Survive

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US