யூரோ கிண்ண காலிறுதியில் தோல்வி..ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்
ஜேர்மனி வீரர் டோனி குரூஸ் அதிகாரப்பூர்வமாக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயினியிடம் தோல்வி
ஸ்டட்கர்ட்டின் MHPArena மைதானத்தில் யூரோ கிண்ண காலிறுதிப் போட்டியில், ஜேர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினியிடம் தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, ஜேர்மனி அணியின் மூத்த வீரரான டோனி குரூஸ் (Toni Kroos) அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்.
குரூஸ் நம்பிக்கை
34 வயதாகும் குரூஸ் கூறுகையில், ''ஒவ்வொரு ஆட்டமும் இப்போது சில வாரங்களுக்கு எனது கடைசி ஆட்டமாக இருக்கலாம். ஆனால், இன்றுதான் கடைசி ஆட்டம். எங்கள் அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
கடந்த 5 அல்லது 6 மாதங்களில் அணி எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது. சிறந்த அணிக்கு எதிராக போராடியதால் நாங்கள் உண்மையில் ஒரு படி முன்னேறிவிட்டோம்.
இந்த அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவை தொடர்ந்து வளரும் என்று நம்புகிறேன். நான் அவர்களை டிவியில் பார்ப்பேன்'' என தெரிவித்துள்ளார்.
டோனி குரூஸ் 472 போட்டிகளில் விளையாடி 28 கோல்கள் அடித்துள்ளார். மேலும் தனது 17 ஆண்டுகால கால்பந்து வாழ்வில் 34 பட்டங்களை கிளப் அணிகள் வெல்ல காரணமாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |