ட்ரம்பின் வாரியத்தில் இணைவதில் பெருமைப்படுகிறேன்: பிரித்தானிய முன்னாள் பிரதமர்
காஸா அமைதி வாரியத்தில் இணைவதில் பெருமைப்படுவதாக முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.
அமைதி வாரியம்
காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் அமைதி வாரியம் ஒன்றை புதிதாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிறுவியுள்ளார்.
Kevin Dietsch/Getty Images
இதில் அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான அப்பல்லோவின் தலைவர் மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ட்ரம்பின் கொள்கை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் உள்ளனர்.
Getty Images
டோனி பிளேயர்
இந்த குழுவில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான டோனி பிளேயரும் (Tony Blair) இடம்பெற்றுள்ளார்.
அவர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு (AFP) அனுப்பிய அறிக்கையில் டோனி பிளேயர், "அமைதி வாரியத்தை நிறுவியதில் ஜனாதிபதி ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். அதன் நிர்வாக வாரியத்தில் நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
PA Wire
டோனி பிளேயர் ஐ.நா குவார்டெட் அமைப்பின் மத்திய கிழக்கு தூதராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |