உலக அளவில் பெண்களுக்கான தலைசிறந்த 10 நாடுகள்: முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?
2025ம் ஆண்டில் பெண்கள் சுதந்திரமாகவும், அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதிலும் சிறந்து விளங்கும் தலைசிறந்த 10 நாடுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
உலக அளவில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது, அதே நேரம் அவர்களுக்கான வாழ்க்கையை வடிவமைப்பதிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
எனவே பல்வேறு நாடுகள் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, தனிப்பட்ட சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் வில்லியம் ரஸ்ஸல் என்ற உலக அளவிலான காப்பீட்டாளர் வெளியிட்ட ஆய்வு முடிவில், பெண்களுக்கான தலைசிறந்த நாடுகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தரவரிசை வெளிநாடு செல்ல விரும்பும் பெண்களுக்கு மிகவும் தெளிவான பார்வையை வழங்குவதோடு, சரியான முடிவை எடுக்கவும் உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட நாட்டிற்கான அளவீடுகள்
இந்த தரவரிசையானது, ஆண், பெண் இடையிலான ஊதிய வேறுபாடு, அரசியலில் பெண்களின் நிலை, உயர் கல்விக்கான வாய்ப்பு, பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான தலைசிறந்த டாப் 10 நாடுகள்
ஐஸ்லாந்து
இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஐஸ்லாந்தில் உள்ள முன்னோடியான சட்டங்கள், பாலின சமத்துவம், சமத்துவமான கலாச்சார, பெண்கள் அரசியல் ஆகியவற்றில் உலா நாடுகளுக்கு தொடர்ந்து முன் உதாரணமாக திகழ்கிறது.
பின்லாந்து
பெண்கள் நாட்டை தலைமை தாங்குவதில் பின்லாந்து நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
இங்கு பதவியில் இருந்த பெண் பிரதமர்கள் முதல் பெண் அமைச்சர்கள் வரை நாட்டிற்கான தங்களது பங்கை சிறப்பாக செய்து இருப்பதுடன், பெண்கள் நல்வாழ்வுக்கும் சிறந்த சட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளனர்.
எனவே பின்லாந்து இந்த தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
அயர்லாந்து
ஆண் பெண் இடையிலான ஊதிய வேறுபாடு குறைவாக இருப்பதுடன் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு நிறைந்த நாடாகவும் அயர்லாந்து விளங்குகிறது.
அத்துடன் இங்கு மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு இருப்பதால் பெண்கள் தங்கள் உடல் மற்றும் பொருளாதார வாழ்க்கையையும் சீராக கவனித்து கொள்ள முடிகிறது.
இங்குள்ள கல்வி, மற்றும் சுகாதார அமைப்புகள் பெண்களுக்கான உகந்ததாக உள்ளது, எனவே அயர்லாந்து இந்த தரவரிசையில் 3 வது இடம் பிடித்துள்ளது.
பெல்ஜியம்
ஆண்-பெண் பாகுப்பாட்டிற்கு எதிரான சட்டங்கள் பெல்ஜியம் நாட்டில் வலுவாக இருப்பதால் இந்த தரவரிசையில் பெல்ஜியம் 4வது இடம் பிடித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் இங்கு இருப்பது நாட்டை பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது.
டென்மார்க்
டென்மார்க்கில் அமைந்துள்ள சமூக நல அமைப்புகள் நாட்டை பாலின சமத்துவத்துவம் கொண்ட நாடாக மாற்றியுள்ளது.
பெண்களுக்கான சுகாதார அமைப்பு, குழந்தைகளுக்கான பராமரிப்பு சலுகை ஆகியவை இவற்றை பெண்களுக்கான உலகின் 5 வது தலைசிறந்த நாடாக மாற்றியுள்ளது.
இவற்றை தொடர்ந்து 6வது இடத்தில் கனடா, 7வது இடத்தில் பிரான்ஸ், 8வது இடத்தில் நார்வே, 9வது இடத்தில் ஸ்வீடன் மற்றும் 10வது இடத்தில் லிதுவேனியா உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |