உலகில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் 10 நாடுகள்
ஹுருன் அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான உலகளவிலான பணக்கார பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 3,442 பில்லியனர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 163 பேர் பில்லியனர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
முதலிடத்தை பிடித்த அமெரிக்கா
இந்த பட்டியலில், 870 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா பில்லியனர் பட்டியலில், 17 பேர் வெளியேறிய நிலையில், 96 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
இதில் 130 பேர் பெண் பில்லியனர்கள் ஆவார்கள். இதில் 129 பேர் நியூயார்க் நகரிலும், 55 பேர் சான்பிரான்ஸிஸ்கோ நகரிலும் வசிக்கிறார்கள்.
இந்த பட்டியலில் மொத்த செல்வத்தில் 42% பங்களிப்பை(6.8 ட்ரில்லியன் டொலர்) அமெரிக்கா வழங்குகிறது.
இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்கா சீனாவை முந்தி முதலிடத்திற்கு வந்துள்ளது.
2ஆம் இடம் சென்ற சீனா
சீனா கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக 2வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனாவில் 82 பேர் வெளியேறிய நிலையில், 91 பேர் புதிதாக இணைந்ததால், 823 பில்லியனர்களுடன் சீனா 2வது இடத்தில் உள்ளது.
இதில் 92 பேர் ஷாங்காய் நகரிலும், 91 பேர் பீய்ஜிங் நகரிலும், 85 ஷென்சென் நகரிலும் வசிக்கிறார்கள்.
சீனா, இந்த பட்டியலின் மொத்த செல்வத்தில் 16% பங்களிப்பை(1.7 ட்ரில்லியன் டொலர்) வழங்குகிறது.
3வது இடத்தில் இந்தியா
இந்திய பில்லியனர் பட்டியலில், 27 பேர் வெளியேறிய நிலையில், 45 பேர் புதிதாக இணைந்துள்ளதால், 284 பில்லியனர்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்த பில்லியனர் பட்டியலின் மொத்த செல்வத்தில் 7% பங்களிப்பை(941 பில்லியன் டொலர்) இந்தியா வழங்குகிறது. இதில் 9 பேர் புலம்பெயர்ந்த பில்லியனர்கள் ஆவார்கள்.
இதில் 90 பேர் மும்பையிலும், 63 பேர் டெல்லியிலும் வசிக்கிறார்கள்.
இதில் 150 பில்லியனர்களுடன் பிரித்தானியா தொடர்ந்து 2 ஆண்டுகளாக 4வது இடத்தில் உள்ளது. இந்த பில்லியனர் பட்டியலின் மொத்த செல்வத்தில் 605 பில்லியன் டொலர் பங்களிப்பை பிரித்தானியா வழங்குகிறது.
இதில் 97 பேர் லண்டனில் வசிக்கிறார்கள்.
141 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 596 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி ஜேர்மனி 5வது இடத்தில் உள்ளது.
116 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 506 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி சுவிட்சர்லாந்து 6 வது இடத்தில் உள்ளது.
89 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 362.8 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி ரஷ்யா 7 வது இடத்தில் உள்ளது.
72 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 489.9 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி பிரான்ஸ் 8 வது இடத்தில் உள்ளது.
69 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 205.1 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி இத்தாலி 9 வது இடத்தில் உள்ளது.
67 பில்லியனர்களுடன், மொத்த செல்வத்தில் 176.8 பில்லியன் டொலர் பங்களிப்பை வழங்கி பிரேசில் 10 வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |