உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகளின் பட்டியல் - முதலிடம் எந்த நாடு தெரியுமா?
Insider Monkey என்ற தளம் உலகில் அழகான பெண்கள் கொண்ட 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா
இந்த பட்டியலில், தென் அமெரிக்க நாடான கொலம்பியா முதலிடம் பிடித்துள்ளது.
கொலம்பிய பெண்கள், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் துடிப்பான ஆளுமைகளுக்காக உலகளவில் போற்றப்படுகிறார்கள்.
சோபியா வெர்கரா மற்றும் கேடலினா சாண்டினோ மொரேனோ போன்றோர் ஈர்க்கக்கூடிய ஆளுமைகளுக்காகப் பாராட்டப்படுகிறார்கள்.
போலந்து
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
உயர்ந்த கன்ன எலும்புகள் மற்றும் முழுமையான உதடுகள் ஆகியவற்றிற்காக போலந்து பெண்கள் பாராட்டப்படுகிறார்கள்.
கிரீஸ்
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான கிரீஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
ரஷ்யா
உயரமான உடல் அமைப்பு, வெளிர் தோல் காரணமாக ரஷ்யா பெண்கள் 4வது இடம் பிடித்துள்ளனர்.
செக் குடியரசு
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசு 5வது இடம் பிடித்துள்ளது.
செக் பெண்கள், பெரும்பாலும் சர்வதேச அழகுப் போட்டிகளில் தனித்து நிற்கிறார்கள்.
ஸ்வீடன்
ஸ்காண்டிநேவிய நாடான ஸ்வீடன் இந்த பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது.
ஸ்வீடன் பெண்கள் தங்களின் பொன்னிற கூந்தல், நீல நிற கண்கள் மற்றும் நேர்த்தியான உருவங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
ஐஸ்லாந்து
நோர்டிக் தீவு நாடான ஐஸ்லாந்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கா இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவின் கலாச்சாரக் கலவை, அனைத்து இனங்களையும் தோற்றங்களையும் கொண்ட பெண்களை ஒன்றிணைக்கிறது.
பிரேசில்
தென் அமெரிக்கா நாடான பிரேசில், இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
பூர்வீக, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் கலவையானது, பிரேசில் பெண்களின் அழகில் ஒரு அற்புதமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது.
ஜப்பான்
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பானிய பெண்கள், வெளிர் தோல், கருப்பு அல்லது பழுப்பு நிற கண்கள் மற்றும் அடர் முடி கொண்டவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |