செயற்கைகோள்களில் முன்னிலை வகிக்கும் 10 நாடுகள்: 7-வது இடத்தில் இந்தியா
பூமியை சுற்றி செயற்கைகோள்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, Orbiting Now தரவின்படி 12,952 செயற்கைகோள்கள் பூமி சுற்றிவந்துக் கொண்டிருக்கின்றன.
இதில், 2025ஆம் ஆண்டில் மட்டும் 145 புதிய செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
செயற்கைகோள்கள் பெரும்பாலும் கீயோஸ்டேஷனரி (GEO), மிதமான பூமி வட்டப் பாதை (MEO) மற்றும் தாழ்வான பூமி வட்டப் பாதை (LEO) ஆகிய மூன்று முக்கிய பாதைகளில் செலுத்தப்படுகின்றன.
LEO பாதையில் சிறிய செயற்கைகோள்களும், GEO/MEO வட்டப் பாதைகளில் பாரிய மற்றும் உயர் திறனுள்ள செயற்கைகோள்களும் பயன்பாட்டில் உள்ளன.
2025 நிலவரப்படி செயற்கைகோள்கள் அதிகம் உள்ள 10 நாடுகள்:
1. அமெரிக்கா - 8,530 செயற்கைகோள்கள்
SpaceX நிறுவனம் மட்டுமே 7,400க்கும் மேற்பட்ட Starlink செயற்கைகோள்களைக் கொண்டுள்ளன.
2. ரஷ்யா - 1,559 செயற்கைகோள்கள்
2036-க்குள் 2,600 செயற்கைகோள்களாக அதிகரிக்கும் நோக்கில் Roscosmos நிறுவனம் முயற்சி செய்கிறது.
3. சீனா - 906 செயற்கைகோள்கள்
அரசு, இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் சீன 906 செயற்கைகோள்களை கொண்டுள்ளது.
4. பிரித்தானியா (UK) - 763 செயற்கைகோள்கள்
ராணுவ, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைக்கு முக்கிய பங்காற்றும் வகையில் மொத்தம் 763 செயற்கைகோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன.
5. ஜப்பான் - 203 செயற்கைகோள்கள்
ஜப்பான் தற்போது சுற்றுப்பாதையில் சுமார் 203 செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. அவை அரசு, இராணுவம், அறிவியல் மற்றும் புதுமையான களங்களில் உள்ளன.
6. பிரான்ஸ் - 100-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள்
இராணுவ புலனாய்வு, உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமி படங்கள் மற்றும் விண்வெளி-பாதுகாப்பு டெமோக்கள் உள்ளிட்ட நோக்கங்களுக்காக பிரான்ஸ் 100 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது.
7. இந்தியா - 136 செயற்கைகோள்கள்
ISRO தலைமையில், deep space திட்டங்களில் Chandrayaan-2 மற்றும் Aditya-L1 முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், 100- முதல் 150 புதிய செயற்கைகோள்கள் எதிர்காலத்தில் ஏவப்படும்.
8. ஜேர்மனி - 82 செயற்கைகோள்கள்
அரசு, அறிவியல், பாதுகாப்பு மற்றும் வணிக பணிகளை உள்ளடக்கிய n2yo.com தரவுகளின்படி, ஜேர்மனி விண்வெளியில் சுமார் 82 செயலில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. 2029-க்குள் சொந்த செயற்கைகோள் குழுமம் அமைக்க ஜேர்மனி திட்டமட்டள்ளது.
9. கனடா - 64 செயற்கைகோள்கள்
புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நோக்கங்களுக்காக கனடா இதுவரை சுமார் 64 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. Telesat, GHGSat போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
10. இத்தாலி - 66 செயற்கைகோள்கள்
கடைசியாக, இத்தாலி தற்போது சுற்றுப்பாதையில் சுமார் 66 செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது, இது கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. IRIDE திட்டம் மூலம் 2030-க்குள் 100 செயற்கைகோள்களுடன் வளரும் திட்டம்.
இவ்வாறு, வானில் சூழ்ந்த செயற்கைகோள்களால் உலக நாடுகள், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, பருவநிலை கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகளில் முன்னேறி வருகின்றன.
இந்தியாவும் அதன் தனிப்பட்ட மற்றும் தனியார் முயற்சிகள் மூலம் விண்வெளிப் போட்டியில் வேகமாக முன்னேறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |