2025-ஆம் ஆண்டில் அதிக லாபம் பெறவுள்ள டாப் 10 கிரிப்டோகரன்ஸிகள்
கிரிப்டோ சந்தை எப்போதும் வேகமாக மாறும், கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் சில திட்டங்கள் நீண்ட கால வளர்ச்சிக்கான சக்தியை வெளிப்படுத்துகின்றன.
சமீபத்திய விலை மாற்றம், வர்த்தக அளவு மற்றும் சந்தை வேகத்தைக் கொண்டு, 2025-ஆம் ஆண்டில் அதிக லாபம் தரக்கூடிய 10 முக்கிய கிரிப்டோக்களை இங்கே காணலாம்.
1. Story (IP)
மாதத்திற்கு 130% உயர்வு கண்டுள்ள Story (IP), டீ-சென்ட்ரலைஸ் பைனான்ஸ் (DeFi) துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது $5.64 விலையில் இருந்து $54 மில்லியன் தினசரி வர்த்தக அளவுடன் இருக்கிறது.
2. Four (FORM)
92.64% உயர்வு கண்டுள்ள Four (FORM), $1.75 என்ற விலையில் வர்த்தகம் செய்கிறது. $90 மில்லியன் தினசரி வர்த்தக அளவுடன், இது DeFi-ல் பிரபலமாகிவருகிறது.
3. Kava (KAVA)
$0.5462 என்ற விலையில் இருப்பதுடன், 18.29% வளர்ச்சியுடன் Kava, $58 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன் மிதமான வளர்ச்சியை காட்டுகிறது.
4. Celestia (TIA)
$3.28 விலையில் 6.94% வளர்ச்சி கண்டுள்ள Celestia (TIA), $67 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன், தனது மாடுலர் கட்டமைப்பால் பிரபலமடைந்து வருகிறது.
5. DeXe (DEXE)
$19.04 விலையில், 4.24% வளர்ச்சியுடன் உள்ள DEXE, $13 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன் இருக்கும்.
6. OKB: OKX
$52.08 விலையில், 4.15% வளர்ச்சி கண்டுள்ளது. $10.8 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன், இது பரிவர்த்தனை கட்டண தள்ளுபடி மற்றும் டோக்கன் வெளியீடுகளில் பயன்படுகிறது.
7. PAX Gold (PAXG)
$3,056.29 விலையில் 3.36% வளர்ச்சி கண்டுள்ள PAXG, $53 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன் தங்கத்தின் மதிப்பை பிரதிபலிக்கிறது.
8. Tether Gold (XAUt)
$3,035.27 விலையில் 3.28% வளர்ச்சி பெற்றுள்ள XAUt, $7.4 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன், முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான நாணயமாக உள்ளது.
9. Bitcoin Cash (BCH)
$333.11 விலையில், 3.16% வளர்ச்சி கண்டுள்ள BCH, $226 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன் peer-to-peer பரிவர்த்தனைகளில் முன்னணியில் உள்ளது.
10. Maker (MKR)
$1,218.76 விலையில் 2.08% வளர்ச்சி கண்ட MKR, $66 மில்லியன் தினசரி வர்த்தகத்துடன் DAI ஸ்டேபிள்கோயினின் ஆதாரமாக செயல்படுகிறது.
Story (IP), FORM போன்ற சில டோக்கன்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்க, MKR, Celestia போன்றவை வலுவான அடிப்படைகளுடன் வளர்ந்து வருகின்றன. தங்க ஆதார கிரிப்டோக்கள் (PAXG, XAUt) மற்றும் பரிவர்த்தனை டோக்கன்கள் (OKB, BCH) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான டோக்கன்களாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |