உலகின் டாப் 10 பொருளாதார நாடுகள்: 2029 இல் இந்தியா பிடிக்கும் இடம் எது?
உலகப் பொருளாதாரம் தற்போது பல நாடுகளிலிருந்து வளர்ந்து வருகின்றது. அந்தவகையில் 2029 ஆம் ஆண்டுகளில் எந்த நாடு பொருளாதாரத்தில் முதல் 10 ஆம் இடத்தில் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
2029 இல் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகள்
2029-30 ஆம் ஆண்டுகளில் உலகில் நம்பர் 1 பொருளாதாரம் மிக்க நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் IMF தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
நான்காவது இடத்தில் ஜெர்மனி இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போது மூன்றாவது பொருளாதாரம் நாடாக ஜெர்மனி இருக்கிறது.
2029 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஆறாம் இடத்தில் உள்ள பிரித்தானியா 2029 ஆம் ஆண்டிலும் அதே இடத்தில் இருக்கும் என தரவுகள் கூறுகின்றன.
ஏழாம் இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாடும் 2029 ஆம் ஆண்டில் ஏழாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு கூறுகிறது.
தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பிரேசில், 2029 ஆம் ஆண்டில் எட்டாவது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாவது இடத்தில் இருந்த இத்தாலியை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்தை பிடித்த கனடா 2029 ஆம் ஆண்டில் அதே இடத்தில் இருக்கும்.
எட்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இத்தாலி உள்ளது இந்த நாடு 2029 ஆம் ஆண்டு பத்தாவது இடத்திற்கு செல்லும் என சர்வதேச நாணய நிதியம் IMF தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |