கோடிகளில் கொட்டும் பண மழை! 2025ம் ஆண்டில் உலகின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்?
உலகின் தலைசிறந்த பணக்காரர்கள் பற்றிய ஆர்வம் எப்போதும் மக்களிடையே இருந்து வருகிறது. அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள கதை, அவர்கள் எவ்வாறு தங்கள் செல்வத்தை உருவாக்கினார்கள் என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழும்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த பட்டியல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
இந்த பதிவில், தற்போதைய உலகின் டாப் 10 பணக்காரர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
உலகின் 10 வது மிகப்பெரிய பணக்காரர்
NVIDIA என்ற கிராபிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனத்தின் தலைவர் ஜென்சன் ஹுவாங் உலகின் 10 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
AI மற்றும் கேமிங் துறைகளில் NVIDIA-வின் தாக்கம் மிகப்பெரியது.
ஜென்சன் ஹுவாங்கிடம் 120.2 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து உள்ளது. இது இந்திய ரூபாயில் சுமார் 10.39 லட்சம் கோடியாகும்.
உலகின் 9 வது மிகப்பெரிய பணக்காரர்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் பால்மர், உலகின் 9-வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 10.89 லட்சம் கோடியாகும்.
உலகின் 8 வது மிகப்பெரிய பணக்காரர்
பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட், உலகின் 8 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 12.63 லட்சம் கோடியாகும்.
உலகின் 7 வது மிகப்பெரிய பணக்காரர்
கூகுள் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், உலக பணக்காரர் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 13.31 லட்சம் கோடியாகும்.
உலகின் 6 வது மிகப்பெரிய பணக்காரர்
கூகுள் நிறுவனர்களில் மற்றொருவரான லேரி பேஜ், உலக பணக்காரர் வரிசையில் 6-வது இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 13.95 லட்சம் கோடியாகும்.
உலகின் 5 வது மிகப்பெரிய பணக்காரர்
லூயி விட்டன் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர், உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் 5வது இடத்தில் உள்ளனர்.
அவர்களது மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 15.67 லட்சம் கோடியாகும்.
உலகின் 4 வது மிகப்பெரிய பணக்காரர்
ஆரேக்கிள் நிறுவனத்தின் நிறுவனரான லேரி எல்லிசன், இந்த வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 17.68 லட்சம் கோடியாகும்.
உலகின் 3 வது மிகப்பெரிய பணக்காரர்
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 18.30 லட்சம் கோடியாகும்.
உலகின் 2 வது மிகப்பெரிய பணக்காரர்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், உலக பணக்காரர் பட்டியலில் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 20.69 லட்சம் கோடியாகும்.
உலகின் முதல் மிகப்பெரிய பணக்காரர்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழ்கிறார்.
அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 37.50 லட்சம் கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |