இந்தியாவில் அதிகமான பெண்களுக்கு வன்புணர்வு நடைபெறும் 10 மாநிலங்கள் எவை தெரியுமா?
சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்துக்கொண்டு இருக்கின்றது. இதற்கான அதிகப்பட்ச தண்டனையும் தகுந்த நடவடிக்கையும் எடுக்குமாறு பலரும் போராட்டம் செய்து வருகின்றனர்.
கடந்த வாரங்களில் உலகையே திரும்பி பார்க்க வைத்த, கொல்கத்தா பெண் மருத்துவரின் வழக்கும் அனைத்து பெண்களையும் நடுநடுங்க வைத்தது.
ஒரு பெண் தனியாக வெளியில் செல்வதில் கூட பயம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் முதல் 90 வயது பாட்டி வரை பல பெண்கள் இவ்வாறான துர்திஷ்டமான செயலுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
இந்த நிலை உலகில் உள்ள பல நாடுகளில் நிகழ்ந்தாலுமே, கொடூரமாக இந்தியாவில் தான் அடிக்கடி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அந்தவகையில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இது அதிகமாக நடைபெறுகிறது என்று குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அதிகமான வன்புணர்வு நடைபெறும் 10 மாநிலங்கள்
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட தேசிய குற்றப்பதிவு அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 31,516 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் அந்த அறிக்கையில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான குற்ற விகிதமும் (Crime Rate Per Lakh Population) தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில், எத்தனை பெண்களுக்கு வன்புணர்வு நடைபெறுகிறது என்பது குறித்து வெளியிடப்பட்டிருந்தது.
10. அசாம்
09. டெல்லி
08. சத்தீஸ்கர்
07. ஜார்கண்ட்
06. ஒடிசா
05. ஹரியானா
04. மகாராஷ்ட்ரா
03. மத்திய பிரதேசம்
02. உத்தர பிரதேசம்
01. ராஜஸ்தான்
20 ஆம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இங்கு 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 421 வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இதில் இறுதியாக இருப்பது சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 13 வன்புணர்வு சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.
மேலும் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் யூனியன் பிரதேசம் லக்ஷதீப். இங்கு அந்த ஆண்டில் 4 வன்புணர்வு சம்பவங்கள் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |