T20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய 5 வீரர்கள்
T20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
ஃபின் ஆலன் - 19 சிக்ஸர்கள்
நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 2025 MLC தொடரில் வாஷிங்டனுக்கு எதிரான போட்டியில், 19 சிக்ஸர்களை விளாசினார்.

T20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்ஸ் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெய்ல் - 18 சிக்ஸர்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல், 2017 BPL தொடரின்போது, டைனமைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 சிக்ஸர்கள் விளாசி 2வது இடத்தில் உள்ளார்.
சாஹில் சௌஹான் - 18 சிக்ஸர்கள்

எஸ்டோனியாவை சேர்ந்த சாஹில் சௌஹான், 2024 ஆம் ஆண்டில் சைப்ரஸுக்கு எதிரான போட்டியில் 18 சிக்ஸர்களை விளாசி 3வது இடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெய்ல் - 17 சிக்ஸர்கள்

2013 ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், 17 சிக்ஸர்கள் விளாசி மீண்டும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
புனித் பிஷ்ட் - 17 சிக்ஸர்கள்

மேகாலயா வீரர் புனித் பிஷ்ட், 2021 ஆம் ஆண்டில் மிசோராமிற்க்கு எதிரான போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |