உலகில் இரவே இல்லாத 5 முக்கிய நாடுகள்: இயற்கையின் விசித்திரம் குறித்த முழு பார்வை!
உலகில் பெரும்பாலான நாடுகளில், பகல் முடிந்து இரவு தொடங்கும் போது சூரியன் மறைந்து நிலா தோன்றுவது வழக்கம். ஆனால், சில நாடுகளில் இரவு என்பதே இல்லாமல் எப்போதும் சூரியன் உதயமான நிலையிலேயே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக, ஒரு நாட்டில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் இருப்பது இயல்பு.
பகல் முடிந்ததும் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும். மறுபடியும் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகும். இப்படித்தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது.
ஆனால், சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
நார்வே
இங்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை.
அதனால் தான் ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வே "நள்ளிரவு சூரியனின் நாடு" என்று அழைக்கப்படுகிறது.
நார்வேயின் ஸ்வால்பார்டில், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கிறது.
நுனாவுட், கனடா
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் இரண்டு டிகிரி, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது.
இங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கிறது.
மறுபுறம், குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முற்றிலும் இருட்டாக இருக்கும்.
ஐஸ்லாந்து
கோடையில் ஐஸ்லாந்து இருட்டாக இருக்காது. ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாகவே இருக்கும்.
பாரோ, அலாஸ்கா
மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை.
இங்கு நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இங்கு மீண்டும் சூரியன் உதிக்காது. இது "போலார் நைட்" என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலம் முழுவதும் நாடு முழுவதும் இருளில் மூழ்கி விடும்.

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது?
ஸ்வீடன்
ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.
குறிப்பாக “அர்கெடல்” போன்ற இடங்களில் கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரிய ஓளி இருக்கும்.
இங்கு தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறைவதில்லை. பகல் மட்டுமே இருக்கும்.
இந்த நாடுகள் அனைத்தும் பூமியின் வட துருவத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கு சூரியன் மறைவதில்லை. இது ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வாகும், இது உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |