கோடிகளில் வருமானம்.., இந்தியாவில் அதிக பணம் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள்
இந்திய ரயில்வே சுமார் 7,308 ரயில் நிலையங்களை இயக்கி வருகிறது.
தினந்தோறும் சுமார் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர்.
அதாவது, விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய், பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் வரும் வருவாய், கடைகள் மூலம் வருவாய் என ரயில் நிலையங்களுக்கு பல்வேறு வகையில் வருவாய் வருகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள் குறித்து பார்க்கலாம்.
1. 2023-24 நிதியாண்டில் புது டெல்லி ரயில் நிலையம் தான் நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையமாகும்.
அதாவது, அந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.3,337 கோடியை ஈட்டியிருக்கிறதாக ரயில்வே துறை தரப்பிலான தரவுகள் கூறுகின்றனர்.
அந்த ஓராண்டில் அங்கு 39 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரத்து 272 பயணிகள் புது டெல்லி ரயில் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
2. இரண்டாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையம் விளங்குகிறது.
இங்கு 2023-24 நிதியாண்டில் மட்டும் 1,692 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அங்கு 61 கோடி பயணிகள் ஓராண்டில் பயன்படுத்துகின்றனர்.
3. மூன்றாவது இடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமாகும். அதாவது, 2023-24 நிதியாண்டில் சுமார் 1,299 கோடி ரூபாயை வருவாயாக பெற்றது.
பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய முக்கிய நகரங்களுடன் சென்னையும் இணைக்கப்பட்டுள்ளது.
4. இதில் 4வது இடத்தில் இருப்பது செகந்திராபாத் ரயில் நிலையம்.
இந்த ரயில் நிலையம் ஓராண்டில் சுமார் ரூ.1,276 கோடியை வருவாயாக பெற்றுள்ளது. 27.7 மில்லியன் பயணிகள் இங்கு ஓராண்டில் பயணித்துள்ளனர்.
5. 5வது இடத்தில் பீகார் தலைநகர் பாட்னா ரயில் நிலையம் உள்ளது.
2023-24 நிதியாண்டில் பாட்னா ரயில் நிலையம் 689 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது. இங்கு தினமும் 2 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |