உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 டென்னிஸ் வீரர்கள்: 2025 ஆண்டு தரவரிசை
உலக விளையாட்டு அரங்கில் டென்னிஸ் தனக்கென தனி இடத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளது.
இத்தகைய டென்னிஸ் விளையாட்டில் தற்போதைய இளம் வீரர்கள் நிதி ரீதியாகவும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் டென்னிஸ் விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது./// இந பட்டியலின் அடிப்படையில் 2025ம் ஆண்டில் டாப் 10 வீரர்கள் மட்டும் சுமார் $285 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளனர்.
அதிக சம்பாதிக்கும் டாப் 5 டென்னிஸ் வீரர்கள்
கார்லோஸ் அல்கராஸ்(Carlos Alcaraz)
ஸ்பெயினின் இளம் சாதனை வீரரான கார்லோஸ் அல்கராஸின் மொத்த வருமானம் சுமார் $48.3 மில்லியன் டொலராகும்.
😘🏆✌🏻1️⃣ pic.twitter.com/yX2bSB2nuz
— Carlos Alcaraz (@carlosalcaraz) September 7, 2025
இதில் இவர் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மூலம் $13.3 மில்லியன் டொலரையும், மைதானத்திற்கு வெளியே ஸ்பான்சர்ஷிப் மற்றும் BMW, Louis Vuitton, மற்றும் Rolex போன்ற பிற ஒப்பந்தங்கள் மூலம் $35 மில்லியன் டொலரும் சம்பாதிக்கிறார்.
தன்னுடைய 22 வயதிலேயே 5 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னை சிறந்த வீரராக நிரூபித்துள்ளார்.
ஜானிக் சின்னர் (Jannik Sinner)
இத்தாலியின் இளம் நட்சத்திரமான ஜானிக் சின்னரின் மொத்த வருமானம் சுமார் $47.3 மில்லியன் டொலராகும்.
இதில் இவர் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மூலம் $20.3 மில்லியன் டொலரையும், மைதானத்திற்கு வெளியே ஸ்பான்சர்ஷிப் மற்றும் Gucci, Lavazza, மற்றும் De Cecco போன்ற பிற ஒப்பந்தங்கள் மூலம் $27 மில்லியன் டொலரும் சம்பாதிக்கிறார்.
ஜானிக் சின்னர் தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இவர் அவுஸ்திரேலியா ஓபன் மற்றும் விம்பிள்டன் போன்ற பிரபலமான டென்னிஸ் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கோகோ காஃப்(Coco Gauff)
அமெரிக்க வீராங்கனையான கோகோ காஃப் தன்னுடைய மொத்த வருமானமாக $37.2 மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறார்.
இதில் இவர் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மூலம் $12.2 மில்லியன் டொலரையும், மைதானத்திற்கு வெளியே ஸ்பான்சர்ஷிப் மற்றும் New Balance, Bose போன்ற பிற ஒப்பந்தங்கள் மூலம் $25 மில்லியன் டொலரும் சம்பாதிக்கிறார்.
கோகோ காஃப்-பின் இந்த வருமானம் மூலம் அவர் டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அதிகம் சம்பாதிக்கும் பெண் வீராங்கனை என்ற பெருமையை கொண்டுள்ளார்.
மேலும் இவர் தனக்கு சொந்தமான நிர்வாக நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
நோவாக் ஜோகோவிச்(Novak Djokovic)
நோவாக் ஜோகோவிச் ஆண்டுக்கு சுமார் $29.6 மில்லியன் சம்பாதிக்கிறார், இதில் மைதானத்தில் $4.6 மில்லியனும், மைதானத்திற்கு வெளியே $25 மில்லியனும் உள்ளடக்கம்.
38 வயதான நோவாக் ஜோகோவிச் இன்னும் டென்னிஸ் விளையாட்டில் சக்தி வாய்ந்த வீரராக திகழ்கிறார்.
நோவாக் ஜோகோவிச்-சின் வெற்றிகள் குறைந்தாலும், அவரது புகழ் இன்றும் உச்சத்தில் உள்ளது.
அவர் Aman Resorts மற்றும் Qatar Airways ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளார்.
அரினா சபலென்கா(Aryna Sabalenka)
டென்னிஸ் விளையாட்டில் பெண் தரவரிசையில் அரினா சபலென்கா முதலிடத்தில் உள்ளார்.
Aryna trained with Maria Sakkari today 🎾🧱 pic.twitter.com/94HSoGwzf6
— News Aryna Sabalenka (@Sabanewsss) May 23, 2024
இவரது ஆண்டு மொத்த வருமானம் $27.4 மில்லியன் டொலராகும். இதில் இதில் மைதானத்தில் $12.4 மில்லியனும், மைதானத்திற்கு வெளியே $15 மில்லியனும் உள்ளடக்கம்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அரினா சபலென்கா புதிய பட்டங்களையும் வணிக ஒப்பந்தங்களையும் தற்போது ஈர்த்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |